Skip to main content

ஆழ்துளை கிணறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இல்லையேல்....கலெக்டர் அதிரடி

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆழத்துளை கிணறு அமைக்கும் இயந்திர உரிமையாளர்கள், ஊராக வளர்ச்சித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை உட்பட பிற துறை அதிகாரிகள் இணைந்த கூட்டுக்குழு கூட்டம், நவம்பர் 5ந்தேதி காலை தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
 

collector warns


இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, திருச்சி அடுத்த மணப்பாறையில் போர்வெல் குழாயில் விழுந்து உயிர்விட்ட சுஜித்வில்சன் விவகாரத்தை பற்றி பேசியவர். இதுப்போன்று நமது மாவட்டத்தில் ஒரு விபத்து நடக்ககூடாது. அதற்கான வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும்.

அரசு மற்றும் தனியார் இடங்களில், நிலங்களில் எங்கெல்லாம் போர்வெல் போடப்பட்டுள்ளதோ, அங்கு சென்று அது சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா ?, மூடாத போர்வெல்கள் மூடப்பட்டுள்ளதா போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து சார்பில் போடப்பட்ட போர்வெல்கள் திறந்துயிருந்தால் அதனை மூடிப்போட்டு மூடிவேண்டும், நீர் வராத போர்வெல் என்றால் அதனை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற வேண்டும்.

போர்வெல் அமைக்கும் இயந்திரங்களின் உரிமையாளர்கள், எங்கெல்லாம் போர்வெல் போடப்படுகிறதோ, அதனை பாதுகாப்பான முறையில் மூடிவைக்க அறிவுறுத்த வேண்டும், விதிகளை மீறி போர்வெல் அமைக்ககூடாது, இதனை மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.


போர்வெல் அமைக்கும் நில உரிமையாளர்களிடம், அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், பைப்பை மூடிப்போட்டு மூட வேண்டும் போன்றவற்றை தெரியப்படுத்த வேண்டும், இல்லையேல் உங்களுக்கான வாகன அனுமதி ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தினார்.

பள்ளி மாணவ – மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கீழ்நாச்சிப்பட்டில் தொடக்கப்பள்ளியில் இறந்த சுஜீத்க்கு கல்வெட்டு வைத்து அஞ்சலி செலுத்தினார் மாவட்ட ஆட்சித்தலைவர் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்