Skip to main content

குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையால் நோய் பரவும் அபாயம்!!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

கோவை பாப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் 2000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள குளக்கரையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குப்பையை பிரித்தெடுக்கும் சமூக கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது அக்கூடம் செயல்படாத நிலையில் அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குளக்கரைப்பகுதியில் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்டப்பட்டு வருகின்றனர்.
 

coimbatore issue


இறைச்சிகளை சாப்பிட வரும் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறைச்சியை கடித்து கொண்டு வீட்டின் முன் போடுவதால் மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக காற்றில் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்தில் உள்ள நீரில் கொசுக்கள் அதிகம் உருவாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மாவட்டம் முழுவதும் ஏற்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் பலர் நோய் வாயின்றி கிடக்கும் நிலையில் நோய் பரவும் அச்சமும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.


உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி இந்த பகுதியில் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். மேலும் குளத்திலும் வாய்க்காலில் குப்பை கொட்டுவதை மாவட்ட  நிர்வாகம் கண்காணித்து சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் உள்ள நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்