Skip to main content

முதல்வர் எடப்பாடியை ட்விட்டரில் கிண்டலடிக்கும் ராமதாஸ்!

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
முதல்வர் எடப்பாடியை ட்விட்டரில் கிண்டலடிக்கும் ராமதாஸ்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் எனக்கூறியது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் எனக்கூறினார். இது சமூக வலைதளங்களில் பெரிதும் கிண்டலுக்குள்ளானது. 



இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி தஞ்சாவூர்: எடப்பாடி - இதுவே இப்படி என்றால் இதுவரை சொன்ன கதைகளில் எல்லாம் எத்தனை ஓட்டையோ? 

கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி தஞ்சாவூர்: எடப்பாடி- திருக்குறள் எழுதியது திருஞானசம்பந்தர் என்ற உண்மையையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சொல்லிடுங்க! 

கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி தஞ்சாவூர்: எடப்பாடி- ஆளுவதில் தான் தோல்வி என்றால் மூன்றாம் வகுப்பு கேள்விக்கான பதிலை சொல்வதிலுமா? என தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்