Published on 25/10/2023 | Edited on 25/10/2023

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அக்டோபர் 29 ஆம் தேதி விமானம் மூலம் மதுரை செல்கிறார். இதனையடுத்து 30 ஆம் தேதி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். முதல்வருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் மரியாதை செலுத்துகின்றனர்.