மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை, கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மெரினாவில் 50,422 சதுர அடியில், 80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிட திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கடந்த 27-ஆம் தேதி திறந்து வைத்தனர்.
இந்நிலையில் நேற்று (02.02.2021) 'ஜெ'- நினைவிடமானது மூடப்பட்டது. நினைவிடத்தின் வாயிலில் உள்ள பலகையில், ‘நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் திறன் பூங்காவின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும்’ என பொதுப்பணித்துறையின் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.