/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3280.jpg)
திருச்சி மாவட்டம், லால்குடி மேலத் தெருவில் வசித்து வருபவர் கீர்த்தி வாசன்(26). இவர், அதே தெருவில் சொந்தமாக கால்நடை தீவனகடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் அவர், எல்.அபிஷேகபுரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து புகார் வந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1005.jpg)
அந்தப் புகாரின் அடிப்படையில்,லால்குடி தாசில்தார் சிசிலியா சுகந்தி, துணை வட்டாட்சியர் கார்த்திக், தனி வருவாய் அலுவலர் இளவரசி மற்றும் போலீசார் அந்தப் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 8000 கிலோ மதிப்பில் 170 மூட்டைகள் ரேஷன் அரிசி, எடை மெஷின் ஆகியவை இருந்ததை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து கீர்த்திவாசன் பதுக்கி வைத்திருந்த பொருட்களை வட்டார வழங்கல் அலுவலர்கள் பறிமுதல் செய்து, திருச்சி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)