Skip to main content

சின்னத்தம்பி யானை ஓய்வு எடுத்த புதர் அழிப்பு!!

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
chinnathampi

 

டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டு பின்னர்  100 கிலோமீட்டர் கடந்துவந்து திருப்பூர் கிருஷ்ணாபுரம் அருகே  சுற்றித்திரிந்து வரும்  சின்னத்தம்பி யானை கடந்த மூன்றுநாளாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு புதரில் ஓய்வெடுத்து வந்தது.

 

இந்நிலையில் சின்னத்தம்பி ஓய்வெடுத்து வந்த புதர் ஜேசிபி வாகனம் மூலம் அழிக்கப்பட்டு அங்கு தேங்கியிருந்த சக்கரை ஆலையின் கழிவுநீர் அகற்றப்பட்டு மண்கொட்டி மூடப்பட்டது. சின்னத்தம்பியை அதன் போக்கிலேயே வனப்பகுதிக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது வனத்துறை.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

குட்டியுடன் நின்ற காட்டு யானை; வனத்துறை எச்சரிக்கை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
A wild elephant standing with her cub in Kadapur; Motorists fear

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் யானை கூட்டங்கள் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி சாலையோரம் வருவதும் கிராமத்துக்குள் புகுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மிக குறுகிய சாலையான மலைப்பாதையில் நேற்று இரவு 7 மணி அளவில் குட்டியுடன் தாய் யானை நின்று உணவு தேடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு, தங்களது செல்போனில் யானையைப் படம் பிடிக்க ஆரம்பித்தனர். யானை சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டதால் வாகன ஓட்டிகளால் சாலையைக் கடக்க முடியவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து யானை மலைப்பாதை நோக்கி மேலே ஏறியதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை மெதுவாக இயக்கினர்.

காட்டு யானை குட்டியுடன் சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, குட்டியுடன் இருக்கும் தாய் யானைக்கு அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம். அது மிகவும் ஆபத்தானது. குட்டியுடன் யானைகளைக் கண்டால் வெகு தூரத்திலேயே வண்டியை நிறுத்தி விடுங்கள் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.