Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவின் கேஎஸ்ஆர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது.

 

Mettur Dam

 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 26,000 கன அடியாக இருந்து வந்த நிலையில் தற்போது 27 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 116.11 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 8. 40 டிஎம்சி ஆகவும் இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்