Skip to main content

சீன உளவு பயம்: 42 ஆன்ட்ராய்டு செயலிகளைப் பயன்படுத்த தமிழக போலீசுக்கு கெடுபிடி

Published on 01/12/2017 | Edited on 01/12/2017

சீன உளவு பயம்: 42 ஆன்ட்ராய்டு செயலிகளைப்பயன்படுத்த தமிழக போலீசுக்கு கெடுபிடி

தமிழக காவல்துறை,போலீஸ் அதிகாரிகள் 42 வகை ஆன்ட்ராய்டு செயலிகளை நீக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்தசெயலிகள் தரவுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாதவை மற்றும் மால்வேர் கொண்டவை என்றுகூறப்பட்டுள்ளது.


சீன எல்லையோர பாதுகாப்புக்காவல்படையில் உள்ளவர்கள் இந்த 42 செயலிகளை நீக்கவேண்டுமென்று சில நாட்களுக்கு முன்உத்தரவிடப்பட்ட நிலையில், தமிழக காவல்துறைக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் உயர் அதிகாரிகள்தங்களுக்குக் கீழுள்ள அதிகாரிகளுக்கு, இந்த செயலிகளை நீக்குவதோடு, செல்போனை பார்மேட்செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த 42 செயலிகளில்பெரும்பாலானவை சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை என சைபர் க்ரைம் நிபுணர்களும், இன்டலிஜென்ஸ்பிரிவ்யு அதிகாரிகளும் கூறியதையடுத்தே இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வீ சாட், ட்ரூகாலர், ஷேர் இட், 360 செக்யூரிட்டி போன்ற பிரபல செயலிகளும் இந்த சந்தேகப்பட்டியலில்இடம்பெற்றுள்ளன. இந்த செயலிகளை பயன்படுத்துபவர்களின் தரவுகள் மற்றும் இதர விவரங்களின்பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லையென சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தேச பாதுகாப்பு கருதிஅதிகாரிகள் இந்த செயலிகளை பயன்படுத்தாமலிருக்கவும், ஏற்கெனவே பயன்படுத்துபவர்கள் நீக்குவதற்கும்உத்தரவிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்