


Published on 15/06/2020 | Edited on 15/06/2020
கரோனா பாதிப்பு பரவலைத் தொடர்ந்து மத்திய சுகாதார துறை அறிவுறுத்தலின்படி சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் அனைத்து அலுவலகங்களையும் சுத்தப்படுத்தி, கிருமி நாசினி அடிக்கும் பணி கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டது. தலைமைச் செயலக தொலைகாட்சி செய்தியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியபட்டுள்ளதால் பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் தொலைகாட்சி செய்தியாளர்கள் அனைவரும் 4ஆம் கேட் முன்பு உட்கார்ந்திருந்தனர்.