Skip to main content

திருப்பூரில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்! (படங்கள்) 

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22/11/2021) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூபாய் 28.17 கோடி மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ரூபாய் 41.24 லட்சம் மதிப்பீட்டிலான இரண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

 

அதைத் தொடர்ந்து, அங்கு அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி  மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அத்துடன் திருப்பூர் சீர்மிகு நகரத் திட்ட மாதிரி வடிவமைப்புகளைப் பார்வையிட்டார். 

 

இந்த விழாவில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் இ.ஆ.ப., திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்