Skip to main content

மக்களை தேடி மருத்துவம்; 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கிய முதல்வர்

Published on 19/12/2024 | Edited on 19/12/2024
 Chief Minister provided medicine boxes to at least 2 crore beneficiaries

ஈரோடு மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ள முதல்வர் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று ஈரோட்டிற்கு வருகைத் தந்தபோது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இரண்டு கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாள் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.

தொடர்ந்து, இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தா இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் வழங்கும் உன்னதமான திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல் பயனாளியான சரோஜாம்மாளுக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இத்திட்டத்தின் கீழ், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தேவையான மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள் (Palliative Care), இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy) மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டையாலிசிஸ் செய்துகொள்வதற்கான (CAPD) பைகள் வழங்குதல் போன்ற ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்படுகின்றன. Advertisements மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பெண் சுகாதார தன்னார்வலர்கள்,இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள் போன்றவர்கள் இச்சேவைகளை வழங்கி வருகிறார்கள். 

 Chief Minister provided medicine boxes to at least 2 crore beneficiaries

இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில், ஒரு இயன்முறை பணியாளர் மற்றும் ஒரு நோய் ஆதரவு செவிலியர் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் சேவைகளை வழங்கி வருகின்றன. இத்திட்டத்தின், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மீனாட்சிக்கு 29.12.2022 அன்று முதல்வரால் மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் விருது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 25.9.2024 அன்று நடைபெற்ற 79-வது ஐக்கிய நாடுகள் பொதுசபையின்போது, ஐக்கிய நாடுகள் அமைப்பு “United Nation Interagency Task Force Award 2024” உலக நாடுகள் அளவில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்குதல் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இன்றையதினம் முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரத்தில் இரண்டு கோடியாவது பயனாளியான சுந்தராம்பாள் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தா இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

சார்ந்த செய்திகள்