


Published on 16/12/2021 | Edited on 16/12/2021
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16/12/2021) சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடங்களில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அத்துடன் மரக்கன்றுகளை நட்டு வைத்த முதலமைச்சர், நகர்ப்புற சதுக்கத்தைப் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலாண்மை இயக்குநர்/ முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.