Skip to main content

“மன்மோகன் சிங்கை அவமரியாதை செய்வது...” - பா.ஜ.க அரசுக்கு முதல்வர் கண்டனம்

Published on 28/12/2024 | Edited on 28/12/2024
Chief Minister condemns for Manmohan singh Memorial

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (92) உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று முன்தினம்  (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அரசு மரியாதைப்படி யமுனை நதிக்கரை அருகே இன்று (28-12-24) மன்மோகன் சிங்கின் உடல் அவரது குடும்ப முறைப்படி தகனம் செய்யப்பட்டது. 

இதற்கிடையில், மறைந்த மன்மோகன் சிங்குக்கு இறுதிச் சடங்கு நடத்த ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்குமாறு என்ற அவரது குடும்பத்தினர் வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ.க அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு பொருத்தமான இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான உரிமையை அவரது குடும்பத்தினருக்கு மறுக்கும் பாஜக அரசின் முடிவு, அவரது உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை நேரடியாக அவமதிப்பதாகும். குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, 2 முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு அனுப்பியது, ஆணவம், பாரபட்சம். மேலும், அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்டு முயற்சி செய்துள்ளனர். 

டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது. மேலும், மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டது. அவரை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்