கோப்புப்படம்
மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'கீழ் புவனகிரி சுடுகாட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் வெள்ளாற்றின் கரை ஓரமுள்ள மணலை இரவு 12.00 மணிக்கு மேல் பொக்ளைன் இயந்திரம் முலம் மணலை டிப்பர் லாரியில் ஏற்றிச் சுடுகாட்டுப் பாதை பெருமாள் கோவில் வழியாக மணலை எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபடுகிறார்கள். இங்குத் தினமும் மணல் திருட்டு இரவு 12.00 - மணி முதல் காலை 3 மணிவரை நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு அதிகமான டிப்பர் மூலம் வெளியில் கொண்டு செல்லப்படுகிறது. இது மார்க்கெட்டில் யூனிட் ஒன்று ரூ 9 ஆயிரத்திற்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு டிப்பர்க்கு 5 யூனிட் என்ற அளவில் கொண்டு செல்கிறார்கள். மொத்தம் சுமார் ரூ 49,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து புவனகிரி காவல்துறைக்கு தெரித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் பற்றித் தகவல் தெரிவிப்பவர்கள் மீதும் அவர்கள் கொலைவெறி தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் தெரிவிக்கவே பயப்படும் சூழ்நிலையில் உள்ளார்கள். எனவே இந்த மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.