வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வாணிலை ஆய்வுமையம் அறிவித்திருந்த நிலையில் நேற்றிரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 21 செ.மீ., மழை பதிவானது. பூண்டி 20 செ.மீ., திருத்தணி, தாமரைப்பாக்கம் தலா 15 செ.மீ., சோழவரத்தில் 13 செ.மீ., திருவலங்காடு 12 செ.மீ பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிபூண்டியில் தலா 10 செ.மீ., மழை பதிவானது. மேலும், அயனாவரத்தில் 9.6 செ.மீ., பெரம்பூரில் 8.8 செ.மீ., அம்பத்தூரில் 8.5 செ.மீ., புரசைவாக்கத்தில் 7.8 செ.மீ., மாம்பலமத்தில் 7.8 செ.மீ., எழும்பூரில் 7.4 செ.மீ., மயிலாப்பூரில் 7 செ.மீ., தண்டையார்ப்பேட்டையில் 6.5 செ.மீ., மழை பதிவானது. பெரம்பூர் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். வியாசர்பாடி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கபாதையில் தேங்கியுள்ள மழைநீரால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.