Skip to main content

செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இருந்த போதிலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

 

  Chengalpattu corona virus lockdown



இதற்கிடையில் தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்தும், 33  சதவீதம் ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்றும் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு கொண்டுவந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் பகுதிகளில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனாவின் தாக்கம் அப்பகுதியில் அதிகமாக இருப்பதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதேபோல் பெரம்பலூரில் ஏப்ல் 27 வரை 3 நாட்களுக்கு  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


 

சார்ந்த செய்திகள்