தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் முக்கிய பகுதிகளில் ஒன்றான தியாகராய நகர் பகுதி கடைவீதிகளில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "நேர கட்டுப்பாட்டை தாண்டி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளியையொட்டி, தியாகராய நகரில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள், 500 போலீசார் கூடுதலாக போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் டிரோன் கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். தியாகராயர் நகர் போன்ற பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். மக்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.