Published on 30/04/2020 | Edited on 30/04/2020

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காவிரி டெல்டா, உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.