இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை மற்றும் பல மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . இதனால் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விதி முறைகள் அமலில் இருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து (07/04/2019) அன்று வரை தமிழகத்தில் தேர்தல் விதிமீறலில் ஈடுப்பட்ட அரசியல் கட்சிகள் , எந்த வித ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணம் , தங்கம் , வெள்ளி , மற்ற பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது .
அதே போல் தமிழகத்தில் தேர்தல் விதி மீறல் நடந்த மாவட்டங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . இதன் படி தமிழகத்தில் தேர்தல் விதி மீறியதாக சுமார் 3839 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் , இதில் சென்னையில் மட்டும் சுமார் 1293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .
பி.சந்தோஷ் , சேலம் .