இன்னும் இரண்டு வாரங்களில் சென்னையில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறியுள்ளார்.
"தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் கரோனா அதிகமாக பரவுகிறது. மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால் தண்டையார்பேட்டை, ராயபுரத்தில் கரோனா பாதிப்பு அதிகம். கரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனாவைக் கட்டுப்படுத்த வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. குடிசைப்பகுதிகளில் கண்காணிப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். சென்னையில் இன்னும் இரண்டு வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். நான்கு துறை தொடர்பான விவகாரம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட் திறப்புப் பற்றி தற்போது கூற இயலாது. சென்னையில் விதி மீறினால் நான்கு மாதத்துக்கு சலூன் கடைகளைத் திறக்க முடியாது.தளர்வுகள் அதிகரிக்கும் போது நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது. தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும்.சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை.கரோனா பரவலை தடுக்கவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீடிக்கிறது" என்றார்.