Skip to main content

சென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமியர்களின் பேரணி நிறைவு!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நிறைவு பெற்றது.


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

சென்னை வண்ணாரப்பேட்டையில் 6- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். 


பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர். மேலும் பேரணியாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்த நிலையில், சேப்பாக்கத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இதனால் போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய அமைப்பினர், கலைந்து சென்றனர்.
 

சட்டமன்றத்தை முற்றுகையிட மார்ச் 11- ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள காரணத்தால் இஸ்லாமிய அமைப்பினரின் பேரணி சேப்பாக்கத்தில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்