Published on 15/02/2020 | Edited on 15/02/2020
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
![chennai - caa issue - seeman](http://image.nakkheeran.in/cdn/farfuture/EoS12O_piJmFxTRq9q6WNDmuL5mhVFdzgNxqso2mir4/1581746794/sites/default/files/inline-images/11111_91.jpg)
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், " பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது அரசப்பயங்கரவாதம்" என்று தெரிவித்துள்ளார்.