Skip to main content

சென்னைக் கடற்கரைகள் இன்று மூடப்படுகின்றன - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

சீனாவில் உருவான கரோனா வைரஸ், தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

 

Chennai beaches Closesd - Chennai Corporation announcement

 



தமிழகத்திற்கு மார்ச் 31 வரை வெளிமாநில வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்  கேரளா, கர்நாடாக, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி நாளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், நாளை அரசு, தனியார் பேருந்துகள் ஓடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

இந்நிலையில் சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் ஆகிய கடற்கரைகளுக்குச் செல்ல இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி தற்போது உத்தரவிட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்