Skip to main content

மேகமலை கேண்டீன் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பீதியில் மலைக்கிராம மக்கள்

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

 Cheetah movement in Meghamalai canteen area-hill villagers in panic

 

தேனி மாவட்டம் மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மணலாறு செட்டில் இருந்து மகாராஜா மெட்டு செல்லும் வழியில் உள்ள கேன்டீன் முன் சிறுத்தை நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த சில தினங்களுக்கு முன் மணலாறு குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் சிறுத்தை ஒன்று சாதாரணமாக நடந்து வருவதும், பின்னர் இருட்டில் சென்று மறைவதும் பதிவாகியிருந்தது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மணலாறு எஸ்டேட்டில் இருந்து மகாராஜா மெட்டு செல்லும் வழியில் உள்ள கேண்டின் ஒன்றின் சிசிடிவியில் இன்று அதிகாலை மூன்றரை மணியளவில் சிறுத்தை ஒன்று சாலையில் இருந்து சர்வ சாதாரணமாக மேலே ஏறி வருவதும், சில நொடிகள் அங்கேயே படுத்து இளைப்பாறுவதும், அங்கிருந்து கேண்டீன் சுவரோரமாய் சென்று மறைவதும் பதிவாகியுள்ளது. வாரத்தில் இரண்டு முறை சிசிடிவிக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மலைக்கிராம மக்களை அச்சத்திலும் பீதியிலும் உறைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்