Published on 16/05/2022 | Edited on 16/05/2022
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து சேமிப்பாக பெறக்கூடிய முதலீடுகளை ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு பொதுமக்களுக்கு திருப்பித் தராமல் ஏமாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அமுதசுரபி என்ற தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடமிருந்து தினந்தோறும் சேமிப்பாக பெறக்கூடிய பணத்தை முறையாக அவர்களுக்கு திருப்பி தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நிதி நிறுவனம் தங்களை ஏமாற்றுவதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அந்நிறுவனத்தில் சேமிப்பு செய்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.