கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை குறித்து திமுக பொருளாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எங்களைச் சுற்றி ஏதோ கண்காணிப்பு வளையத்தை உருவாக்கி எங்களையே கண்காணித்து வருகிறார்கள். இதுவும் போதாதென்று மேலும் சில செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடப் போவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. எங்களுடைய வீடு கல்லூரி சோதனைகளில் சட்டத்திற்கு புறம்பாக பொருள்கள் எதுவும் கைப்பற்ற முடியவில்லை என்பதால் எங்களை எப்படியும் பழிவாங்கி தீர்வது என்ற முடிவோடு தேர்தல் நெருக்கத்தில், எங்களுக்குச் சொந்தமான இடங்களில் அவர்களாகவே ஏதாவது ஒரு பொருளை வைத்து விட்டு இவர்கள் புதிதாக கண்டுபிடித்துவிட்டதாக அவைகளை காட்டி எங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சி நடப்பதாக அறிகிறோம்.
இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர்குலைத்து விடலாம் இந்த அரசுகள் பெரும் முயற்சி எடுப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். மேலும் இந்த செயலானது ஜனநாயகத்திற்கு புறம்பானது பாசிச முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.