திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா தமிழக அளவில் பிரசித்திப்பெற்றது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுவை என தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தீபத்திருவிழாவை காண திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருவார்கள்.
நாளை (14.11.2018)ந்தேதி விடியற்காலை 5 மணி முதல் 6.15 க்குள் தீபத்திருவிழாவுக்கான கொடியேற்றம் அண்ணாமலையார் கோயிலுக்குள் சந்நிதானத்துக்குள் உள்ள தெங்க கொடி மரத்தில் ஏற்றப்படவுள்ளது. அதன்பின் விழா தொடங்கும். தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு முறை சுவாமிகள் மாடவீதியில் வீதியுலா வரும். இதனை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பர்.
7 வது நாள் 20.11.2018 ந்தேதி மகாரதம் வீதியுலா நடைபெறவுள்ளது. இதனை காண 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என காவல்துறை கணக்கிட்டுள்ளது. 23.11.2018ந்தேதி விடியற்காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2667 அடி உயரம்முள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இதனை காண 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவார்கள்.
இந்த தீபத்திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சுவாமி ஊர்வலத்துடன் மாடவீதியுலா வருவார்கள், அதேப்போல் மகாதீபத்தன்று கிரிவலம் வருவது பக்தர்கள் வாடிக்கை. தீபத்திருவிழாவுக்காக அண்ணாமலையார் பக்தர்கள் மாலை அணிந்து கிரிவலம் வருவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகியுள்ளது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை 14.11.2018 ந்தேதி தொடங்கவுள்ள நிலையில் அண்ணாமலையாருக்காக மாலை அணிய தேவையான பொருட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரடிவீதியில் உள்ள கடைகளில் குவிந்தனர். இதனால் தேரடிவீதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலிஸார் வாகனபோக்குவரத்தை வேறு பாதையில் திருப்பிவிட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது. திருவண்ணாமலை நகரம்மே தீபத்திருவிழாவை முன்னிட்டு கலைக்கட்ட தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் தீபத்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் பக்தர்களுக்காக செய்துள்ள பணிகள், சரியாக செய்துள்ளார்களா என ஆட்சியர் கந்தசாமி அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதையில் ஆய்வுகள் மேற்கொண்டார்.