Skip to main content

மிக கனமழைக்கு வாய்ப்பு- வெளியான அலர்ட்

Published on 15/08/2024 | Edited on 15/08/2024
Chance of very heavy rain in Tamil Nadu

தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஆகஸ்ட் 17-ல் தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, தர்மபுரி, கன்னியாகுமரி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஆகஸ்ட் 17-ல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18 ஆம் தேதி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் மதுரை, திருச்சி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஆகஸ்ட் 19ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், நகரில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்