Published on 12/04/2021 | Edited on 12/04/2021

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 15ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் 14ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.