கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டம் எல்லையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான காப்பு காடுகளில் அரிய வகை வனஉயிரினங்களான மான்கள், காட்டுப்பண்றிகள், முயல்கள் மற்றும் தேசிய பறவையான மயில்கள் என உள்ளிட்ட வன விலங்குகளை சமூக விரோதிகள் கள்ள துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடி அழித்து வருகின்றனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எஸ்பிஜெயசந்திரன் உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை வட்ட காவல் ஆய்வாளர் எழிலரசி தலைமையில் எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் மதுரை வீரன், இளந்திரையன் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கள்ளத்துப்பாக்கி வைத்திருக்கும் வேட்டைதாரர்களை பிடிக்கும் பொருட்டு தேடிவந்தனர்.
இந்த நிலையில் 14.12.2019 ம் தேதிஎறையூர் TO அதையூர் செல்லும் சாலையில் உள்ள காட்டுக்கோயில் அருகே இரவு நேரத்தில் கையில் கள்ள நாட்டுதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்த எறையூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிபுஷ்பராஜ், அந்தோணிசாமி, ஜோசப்ராஜ், லியோபிரகாஷ், ஜான்ரொசரியோ ஆகியோர்களை கைது செய்தும் எலவனாசூர்கோட்டை காவல் நிலையம் அழைத்து வந்து டிஎஸ்பி விஜயகுமார் அவர்கள் விசாரணை செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட நபர்களுக்கு கள்ளத்துப்பாக்கி செய்து விற்பனை செய்த சின்னசேலம் வட்டம்நாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்று தெரிந்தவுடன் துரைசாமியை கைது செய்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 8 கள்ள நாட்டு துப்பாக்கிகளையும், போலி துப்பாக்கி செய்ய பயன்படுத்தும் கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.