Skip to main content

அதிமுக அமைச்சர், எம்.பி பதிலடியில் அப்சட் ஆனா மத்திய ராணுவ அமைச்சர்!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019

இந்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திருச்சி சங்கம் நட்சத்திர விடுதியில் நடந்த ராணுவ தளவாட தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்திற்கு கோவை, ஒசூர், மதுரை, சேலம் ஆகிய இடங்களில் பெரிய தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். 

 

tt

 

 

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி, எம்பி.க்கள் குமார், ரத்தினவேல், மருதைராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருச்சி எம்.பி. என்கிற முறையில் குமார் பேசினார்.

 

அப்போது அவர் பேசும் போது, நான் துரதிர்ஷடமான எம்.பி. காரணம், திருச்சியில் மேம்பாலம் கட்டுவதற்கும், சர்வதேச விமானநிலையம் விரிவாகம் செய்வதற்காகவும் இராணுவத்தின் இடம் இடையே இருப்பதால் அந்த இடத்தை ஒதுக்கி தரும்படி கடந்த காங்கிரஸ் ஆட்சியிலிருந்த இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தொடங்கி, பி.ஜேபி மனோகர் பாரிக்கர், தற்போது உள்ள உங்களிடம் வரை கோரிக்கை வைத்தோம். ஆனால் தற்போது வரை நிறைவேற்றவில்லை என்றார்.

 

அதே போல் தற்போது மாநகரின் மையப்பகுதியான மன்னார்புரம் பகுதியில் இராணுவ இடம் சுமார் 500 ஏக்கர் உள்ளது. அந்த இடத்தை திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நிலம் கொடுக்க வேண்டும் என்று புதிய கோரிக்கை வைத்து பேசினார். 

 

இதை அடுத்து திருச்சி அமைச்சர் என்கிற முறையில் வெல்லமண்டி நடராஜன் பேசினார். அப்போது அவர் எம்.ஜி.ஆர், இரண்டாவது தலைநகரமாக ஆக்க நினைத்தார் ஜெயலலிதா. தன் சொந்தவூர் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு தொகுதிக்கும் திருச்சிக்கும் நிறைய செய்தார், அதே போல நீங்களும் இங்கே தான் படித்தீர்கள் என்பதால் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுங்கள். இராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் சிதிலடைந்து கிடக்கிறது அதை திருச்சி மக்களின் பயன்பாட்டிற்கு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தார். 

 

நிறைவாக பேசிய மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசும்போது இராணுவ தளவாடங்கள் குறித்து எல்லாம் பேசிவிட்டு கடைசியாக, திருச்சி தொகுதி பற்றி பேசினார். இங்கே அமைச்சர் பேசும் போது இராணுவ இடங்கள் சிதிலடைந்து இருப்பதாக சொன்னார். இராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் நீண்டகால திட்டத்தின் அடிப்படையிலே சில இடங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். அது சிதிலடைந்து தான் இருக்கும். காரணம், இருக்கிற நிதி எல்லாம், துப்பாக்கி, ஆயுதம் வாங்குவதற்கு ஒதுக்கி விடுவோம். இந்த இடங்களை சுத்தப்படுத்தி அழகு படுத்துவதற்கு எங்களிடம் பணம் இல்லை. அந்த இடங்களை யாருக்கும் தரமாட்டோம். ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது என்றால் கட்டாயம் நாங்கள் கொடுப்போம். உங்கள் எம்.பி. குமார், தேர்தலுக்காக ஏதோ புது கோரிக்கையாக மன்னார்புரம் பேருந்து நிலையத்திற்கு கேட்டிருக்கிறார். அந்த கோரிக்கை இன்னும் என்னிடம் வரவில்லை என்றார். உடனே கீழே இருந்த எம்.பி.யும், மாவட்ட செயலாளருமான குமார், இடம் மறித்து இது புது கோரிக்கை இல்லை மக்கள் என்னிடம் வைத்த பழைய கோரிக்கை இன்று நீங்கள் வந்ததால் உங்களிடம் நான் கோரிக்கையாக வைக்கிறோம். அதை மனுவாக கொடுக்கிறோம். ஆனால் மேம்பாலம், விமானநிலையத்திற்கு இடம் ஒதுக்கி தர சொன்ன கோரிக்கை நிலுவையில் இருக்கிறது என்றார். 

 

tt

 

 

உடனே கொஞ்சம் சிரித்துக்கொண்டே மத்திய அமைச்சர் மன்னார்புரம் மேம்பாலத்திற்கு, விமானநிலையத்திற்கு இடம் கேட்டு நீங்கள் அனுப்பினீர்கள் உண்மை தான் ஆனால் அதே மார்கெட் விலை கொண்ட இடத்தை மாநில அரசு வழங்கினால் இரண்டே நாட்களில் ராணுவ இடம் வழங்கப்படும் என்றும் சொல்லி பல மாதங்கள் ஆகிவிட்டது.உங்கள் மாநில அரசு தரப்பில் இருந்து இது வரைக்கும் எந்த கோப்பும் வரவில்லை. எங்களுக்கு அதே மதிப்புள்ள இடம் தமிழ்நாட்டில் வேறு எங்கு வேண்டுமானலும் கொடுங்கள் என்று சொல்லியும் இன்னும் எந்த கோப்பும் அனுப்பவில்லை. உங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை. உங்களிடம் தான் சுறுசுறுப்பு இல்லை என்பது போல் பேசி தள்ளினார். 

 

இந்த நேரத்தில் கீழே இருந்த அமைச்சர் மெதுவாக எழுந்து பணிவுடன் மேம்பாலம் கட்டுவதற்கு, விமான நிலையம் விரிவாகத்திற்கு திருச்சி இராணுவ இடத்திற்கு அதே விலைமதிப்பீட்டில் காஞ்சிபுரத்தில் இடத்தை தேர்வு செய்து நாங்கள் 6 மாதத்திற்கு முன்பே உங்களுக்கு அனுப்பிட்டோம். ஆனால் இராணுவ அமைச்சர் துறையில் தான் அதை இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்று அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று சொல்லவும். அந்த அரங்கு கைத்தட்டலில் விண்ணை பிளந்தது. 

 

இதை உள்வாங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரம் முகம் மாறியது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் சமாளித்து நான் திருச்சி வருவதற்கு முன்னாதாக என்னுடைய அலுவலக அதிகாரிகளை எல்லாம் கேட்டேன் திருச்சி சம்மந்தமான எதுவும் நிலுவையில் இருக்கிறாதா என்னை கேள்வி கேட்டு துளைத்து விடுவார்கள் என்று கேட்டேன். ஆனால் என்னுடைய அதிகாரிகள் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை என்றே என்னிடம் சொன்னார்கள். ஆனால் நீங்கள் 6 மாதம் முன்பே அனுப்பியதாக சொல்கிறீர்கள். சொல்பவர் அமைச்சர் என்பதால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது நாளைக்கே விசாரணை நடத்துகிறேன் என்று சொல்லி நிகழ்ச்சியை முடித்தார். 

 

பிஜேபி மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றியவர் மோடி என்றும் மாநில அரசு ஒத்துழைப்போடு மத்திய அரசு நிறைய திட்டங்களை நடத்தி வருகிறது என்றும் மத்திய அரசை பெரிய பிம்பம் போன்று பேசிய மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்து அமைச்சர் எம்.பிகளின் பேச்சு அந்த அரங்கை பரபரப்பாக்கியது. 

 

திருச்சியில் மா.செ. குமாருக்கும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் திருச்சி சம்மந்தமான பொதுமக்கள் பிரச்சனைக்கு இரண்டு பேரும் சரிக்கு சமமாக பேசியது கட்சியினர் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எனக்கு வேண்டாம் என் தம்பிக்கு சீட்டு கொடுங்க'-துரை வைகோவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'I don't want; to give seat to my brother' - Kamal campaign in support of Durai Vaiko

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் திருச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், '' இந்தியாவில் எந்த இடத்தில் மத கலவரம் நடந்தாலும் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றி சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதை படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்க தொடங்கும். அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. ஐந்தாண்டுக்கு ஒரு முறை அந்த கடமையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஒரு சீட்டு சின்ன பிள்ளையிலிருந்து கொடுத்து வைத்திருக்கிறீர்கள், இப்போது என் தம்பிக்கு சீட்டு கொடுங்க என கேட்கிறேன்.  '' என்றார்.

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.