Published on 17/07/2018 | Edited on 17/07/2018
![cau](http://image.nakkheeran.in/cdn/farfuture/8I0IODbPFwekyY597xE-oMPXz89VVPF2eJAXJnPNZEM/1533347644/sites/default/files/inline-images/cauvery_5.jpg)
காவிரி நடுவர் மன்றத்தை கலைப்பதாக மத்திய நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து 28 ஆண்டுகளாக இயங்கி வந்த காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1990 ம் ஆண்டு முதல் காவிரி நடுவர் மன்றம் செயல்பட்டு வந்தது. 2007ம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக இறுதி தீர்ப்பை வழங்கியது நடுவர் நீதிமன்றம். காவிரி நடுவர் இறுதி தீர்ப்பை செயல்படுத்தும்படி உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் அமைக்கப்பட்டதால் காவிரி நடுவர் மன்றம் கலைக்கப்பட்டது.