மதுரை மாநகரில், இரவு நேரங்களில் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து அதன் மூலம் செயின் மற்றும் பணத்தை பறித்து வரும் நபர்களை பிடிப்பதற்கு மதுரை மாநகர், காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் படி, காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு ஜெயந்தி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைப்பெற்றது.
விசாரணையில் தினேஷ், கலைசெல்வி, பாண்டிவிநாயகம், விஜய்சுதர்சன், சுரேஷ்குமார், சம்பத்குமார், மணிமேகலை, மகேஸ்வரி ஆகியோரை கைது செய்து விசாரித்ததில் மதுரை நகரில் பல இடங்களில் மேற்கண்ட பெண்கள் விபச்சார தொழிலுக்கு செல்லும்போது அங்கு உல்லாசமாக இருக்கும் ஆண்களை மிரட்டி அவர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்து, சுமார் ரூ.17,54,000 மதிப்புள்ள 110 பவுன் தங்க நகைகளையும், சம்பவத்திற்கு பயன்படுத்திய 11 செல்போன்கள், 4 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 8 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.