![Cases filed against farmers should be withdrawn](http://image.nakkheeran.in/cdn/farfuture/39w3tfHWVZMw10W_2VmEK2oBr3PuQgvwSF2FbSPmPcc/1640338189/sites/default/files/inline-images/duttur-thangam-tharmarajan.jpg)
இன்று (24-12-2021) அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டத்தை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாளில் மூன்று வேளாண் சட்டத்தை வாபஸ் பெற சட்ட மசோதா தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி.
மேலும் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த சுமார் 700 விவசாயிகள் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். ஜெயங்கொண்டம் பொன்னேரியில் சர்வே செய்து தூர் வாரி அதிக அளவில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் தனியார் உரகடையில் கூடுதல் விலைக்கு யூரியா மூட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது அந்த உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களில் யூரியா பொட்டாஷ் போன்ற தேவையான உரங்கள் அனைத்து விவசாயத்துக்கும் வழங்க வேண்டும். சுக்கிரன் ஏரி பாசனத்தில் உள்ள கோமான் ஓரியூர் நானாங்கூர் சிலுப்பனூர் ஆகிய கிராமங்கள் பல ஆண்டுகள் கோரிக்கை வைத்தும் காவேரி டெல்டா பாசன திட்டத்தில் சேர்க்கவில்லை விரைவில் அந்த கிராமங்களை இனைக்க வேண்டும். டீ பழூர் காறைகுறிச்சி வழியாக விக்கிரமங்கலம் வரை பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.