
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எஸ்.டி, எஸ்.சி பிரிவினர் நீதிபதிகளானது குறித்துப் பேசியது பட்டியல் இனத்தவரை அவமதிக்கும் விதமாக இருந்ததாகப் புகார் எழுந்தது. அவர் மீது சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, ''வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் அளவிற்கு அவர் பேசியதாகத் தெரியவில்லை. மேலும் அவரது பேச்சில் உள்நோக்கம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே முகாந்திரம் இல்லாததால் இந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடுகிறோம்'' என அவர் மீதான வழக்கை ரத்து செய்தனர்.