Published on 12/10/2018 | Edited on 12/10/2018
![High Court](http://image.nakkheeran.in/cdn/farfuture/dIXMau9u7LnuljTGAR45tPFZWBtJMrnL-623lwi4umQ/1539355292/sites/default/files/inline-images/Madras-High-Court_0.jpg)
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணத்தை சி.பி.ஐ.யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை பணி ஒப்பந்தங்களை உறவினர்களுக்கு வழக்கியதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக விசாரிக்காததால் சிபிஐ விசாணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மூன்று மாதத்தில் ஆரம்பக்கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும் என்றும், வழக்கு ஆவணத்தை சி.பி.ஐ.யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.