Published on 04/09/2019 | Edited on 04/09/2019
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை நியமித்து கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தஹில் ரமணியை மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை.
மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை மறுபரிசீலனை செய்யகோரிய நீதிபதி தஹில் ரமணியின் கோரிக்கையை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு நிராகரித்தது. ஒரு பெரிய உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய தலைமை நீதிபதியை, சிறிய மாநிலத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கபடுவது. இதுவே முதன்முறை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.