ஆசிரியை சபரிமாலா உண்ணாவிரதம்!
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆசிரியை சபரிமாலா தனது வீட்டின் முன்பு இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை சபரிமாலா, நேற்று தனது 7 வயது மகனுடன் சேர்ந்து நீட் தேர்வுக்கு தடை கோரி பள்ளி நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அவர் போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்தார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதகாவும், அதற்காகவே தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து திண்டிவனம் அருகே உள்ள தனது வீட்டின் முன்பு இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை அவர் துவங்கி உள்ளார்.