![ம்ல](http://image.nakkheeran.in/cdn/farfuture/1Hjd_5sLEqTQhgbMvLpz5i3j6T1zYb9ADo_-vv0qeMs/1533347662/sites/default/files/inline-images/mla_6.jpg)
18எம்எல்ஏகள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நீதிபதி சத்தியநாராயணன் முன்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார்.
ஆளுநர் அரசை கலைப்பது அல்லது பெரும்பாண்மையை நிரூபிக்க உத்தரவிடுவது மட்டுமே செய்ய அதிகாரம் உள்ளது. இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் எதற்காக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர் என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையிலும் அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவதாக ஏன் அறிவிக்கவில்லை..?
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறிய அவர்கள் தான் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடமும் புகார் அளித்துள்ளனர்.
கட்சி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு பிரிவினருக்கிடையேயான பிரச்சனை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்ததால் ஓ.பி.எஸ். தரப்பு மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதை தலைமை நீதிபதி அமர்வின் இரு நீதிபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.இரண்டு பிரிவாக இருந்தாலும் கட்சி தொடர்கிறது. அந்த கட்சி தான் ஆட்சியிலும் இருந்து வருகிறது.
சபாநாயகர் தன் முடிவை அறிப்பதற்கு முன் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து விட்டதால், ஜக்கையன் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயவில்லை . போதுமான அவகாசம் வழங்கப்பட்ட பிறகே, சபாநாயகர் தகுதி நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தகுதி நீக்க விதிகளின்படி, 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான புகாரை சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது கருத்துக்களை பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன.தங்கள் குறைகள் குறித்து முதல்வரை சந்தித்து முறையிட்டதாகவும், அதை அவர் மறுத்ததால், அவரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் 18 எம்.எல்.ஏ'க்கள் கோருகின்றனர். ஆனால் முதல்வரை சந்தித்தது குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறி விட்டதால், முதல்வரை குறுக்கு விசாரணை செய்ய கோர முடியாது என வாதிடப்பட்டது
இதையடுத்து வழக்கு விசாரணை மீண்டும் திங்கள் தள்ளிவைக்கப்பட்டது.