மடாதிபதிகள், ஆதினங்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அந்த மடத்தின் சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி மதுரையைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன் விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 27 தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மார்ச் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இன்று நீதிபதி ஆர். மகாதேவன் வழங்கிய தீர்ப்பில், "மதுரை உரிமையியல் நீதிமன்ற மதுரை ஆதீனத்துக்குள்ளும், அதன் மடத்துக்குள்ளும், அதன் கோவில்களுக்குள்ளும் நித்தியானந்தா நுழையக்கூடாது. அதை மீறி நுழைந்தால் காவல்துறையின் உதவியிடன் நடவடிக்கை எடுக்கலாம். மதுரை ஆதீனம் மட்டுமல்லாமல் எந்த ஆதினமாக இருந்தாலும், முறைகேட்டில் ஈடுபட்டால் இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதினங்களில் மடாதிபதிகள் நியமிக்கப்படுவது குறித்த அறிக்கையை 8 வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்
சி.ஜீவா பாரதி