Skip to main content

தி.மலையில் 47 ஊராட்சிமன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக டிசம்பர் 27ந்தேதி மற்றும் 30ந்தேதி என நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிந்து, மனு வாபஸ் வாங்கும் தேதியும் முடிந்துள்ளது.

 

thiruvannamalai local election

 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சி பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் 47 பஞ்சாயத்துக்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பான்மையானவர்கள் திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள் 5 பேரும், மதிமுகவை சேர்ந்த ஒருவர் என போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அதேபோல் ஒன்றிய குழு கவுன்சிலர்களில் மூன்று பேர் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்