
சிவகங்கை அருகே ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண்ணும் பிரான்சை சேர்ந்த ஆணுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து செய்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் கிராமத்தில் 70 வயதான யூனிஸ் ஆர் நேஸ்லே என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கும் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜூலியன் சரேலேனா லே என்ற 60 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் முன்னதாக பிரான்சில் வசித்து வந்த நிலையில் தமிழக நண்பர் ஒருவரின் மூலம் தமிழ் கலாச்சாரம் பற்றிக்கேட்டு அறிந்து கொண்ட இவர்கள் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விருப்பப்பட்டுள்ளனர்.
இதற்காகவே சுற்றுலா விசாவில் இந்தியா வந்த இருவரும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றில் தமிழ் முறைப்படி மாலை மாற்றி தாலி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.