Skip to main content

சிஏஏ-வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை மாற்றப்பட்டு ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது.

 

CAA-NRC-NPR issue

 



நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய அந்த அமைப்பினர் ஒன்றிணைந்து இன்று நெல்லை குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மற்றும் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ஷம் சுல்ஹா ரஹ்மானி கண்டன உரையாற்றினார்.


 

சார்ந்த செய்திகள்