Skip to main content

சபதம் மூலம் சாதிப்போம்

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
சபதம் மூலம் சாதிப்போம் 



இராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் சபதம் மூலம் சாதிப்போம் - புதிய இந்தியா சிந்தனை குறித்து கருந்தரங்கம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கி வைத்து பேசியதாவது, குறிப்பாக மழைநீர் சேகரிப்பு, நுண்ணீர் பாசனம், உயர் விளைச்சல், தரமான விதைகள் மற்றும் நாற்றுகளை பயன்படுத்தி வேளாண் உற்பத்தி பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமிப்பு கிடங்குகளில் முறையாக சேமிக்கவும் வேண்டும்.

உணவு பதப்படுத்தும் முறைகள் சார்ந்த தொழில்களான கால்நடைவளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனி வளர்ப்பு போன்ற தொழில்களை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, வேளாண் கடன் உதவி வழங்கி விவசாய நிலங்களை பாதுகாப்பது மேலும் பல்வேறு விவசாயதுறை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாய பெருமக்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த கருத்தரங்கில் மீன்வளர்ப்புதுறை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார்,வேளாண் அறிவியல்நிலைய பேராசிரியர் விஜயலிங்கம்,உதவி பேராசிரியர் ராம்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாலாஜி 

சார்ந்த செய்திகள்