வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. இங்கு சுமார் 118 மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் 25- க்கும் மேற்பட்ட என மொத்தம் 150 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள ஒரு பழைய ஓட்டுக்கட்டிடம் கடந்த 5 மாத காலத்திற்கும் மேலாக மேலேவுள்ள ஓடுகள் உடைந்து வகுப்பறைக்குள் விழுகின்றன.
மேலும் பள்ளி கட்டிடத்தில் சுவரில் இருந்து பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன. இதனால் வகுப்பறைக்குள் செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல், ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர். இந்த பள்ளி வளாகம் அருகில் புதியதாக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் அனைத்து குழந்தைகளையும் அமர வைத்து பாடம் எடுக்கின்றனர் ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள்.
சேதமடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனக்கேட்டு அந்த கிராம மக்கள் இதுவரை வருவாய்த்துறை, கல்வித்துறை, மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை பல மனுக்குள் கொடுத்தும், அதிகாரிகளும், அரசும் நடவடிக்கை எடுக்காததால் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சேதமடைந்த அந்த கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.
தற்போது, முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்திலும் அக்கிராம மக்கள் மனு தந்துள்ளனர். இந்த மனு மீதாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என அக்கிராம மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.