உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சனிக்கிழமை சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அசோக் பாஸ்கர், சித்த மருத்துவர் டாக்டர்.அர்ஜுனன், பேராசிரியர் ஞானக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் முறை, தாய்ப்பால் கொடுப்பதினால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தாய்மார்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கர்ப்பிணிகள், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். அரசு மருத்துவமனை ஊழியர்கள் டாக்டர்கள், காஸ்மோபாலிட்டன் லயன் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.