Skip to main content

இரவில் திருடனை துரத்தி பிடித்த துணிச்சலான பெண்  இன்ஸ்பெக்டர்!

Published on 03/08/2018 | Edited on 27/08/2018

 

shsanmukalakshmi


துணை முதல்வர் ஒபிஎஸ் மாவட்டமான தேனி மாவட்டத்தில்  இருக்க கூடிய பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலா போலவே தேனி அல்லி நகரம் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியும் கடமை உணர்வோடு செயல்பட்டு வருகிறார்.


      நேற்று இரவு  வழக்கம் போல் அல்லி நகரம்  இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி அல்லிநகரம் பகுதியில் ஜீப்பில் தனியாக ரவுன்ஸ் போகும் போது  பொம்பி நாயக்கன் பட்டி பிரிவு அருகே ரோட்டு ஓரத்தில் உள்ள  ஈஸ்வரன் கோவிலில்  உள்ள உண்டியலை   உடைத்து திருடப்பட்டு  இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உடனே  அக்கப் பக்கம் பார்த்து  கொண்டு  இருந்த போது மூன்று பேர் கண்ணுக்கு எட்டிய தூரம் நிற்பதை கண்டு  ஜீப்பை எடுக்க சொல்லி அவர்களை மடக்க முயன்றார். அதற்குள் அந்த மூன்று பேரும் டூவீலரை எடுத்து கொண்டு அன்னாஞ்சி பக்கம்  போவதை கண்டு  ஜீப்பில் விரட்டி இருக்கிறார்.  அதைகண்டு அந்த மூன்று பேரும் டூவீலரை கீழே போட்டு விட்டு அப்பகுதியில்  இருந்த மண்பாதை வழியாக  ஓடுவதை கண்ட இன்ஸ் பெக்டர் தானும் ஜீப்பை நிறுத்த சொல்லி விட்டு அந்த திருடர்களை பிடிக்க  இருட்டில் ஓடிய போது ராதாகிருஷ்ணன் என்ற  ஒரு திருடனை மட்டும்  மடக்கி  பிடித்து  தர்ம அடி  கொடுத்ததை கண்ட அந்த  திருடன் தன் இடுப்பில்  வைத்து இருந்த  கத்தியை  எடுத்து  இன்ஸ்பெக்டர்  கையை அறுத்து விட்டுவிட்டு தப்பிக்க முயன்றான் அப்படி  இருந்தும் கூட  இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி அவனை தப்பிக்க  விடாமல் சட்டையை பிடித்து இழுத்து வந்து ஜீப்பில்  ஏற்றி ஸ்டேசனுக்கு  கொண்டு  வந்து  சோதனை  செய்த  போது அவனிடம் இருந்த 10 ஆயிரத்தையும் டூவிலரையும் கைபற்றினார். அதன் பின் அந்த  திருடன் ராதாகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில் உடன் வந்த  மற்றொரு திருடனான ரமேசையும் கைது செய்தார் இன்ஸ்பெக்டர்.

 

இப்படி இரண்டு திருடர்களை  பெண் இன்ஸ்பெக்டரான சண்முகலட்சுமி  தன் உயிரையும் பொருட்படுத்தாமல்  மடக்கி பிடித்து இருப்பதை கண்டு எஸ்.பி.முதல் மற்ற காக்கிகளும் பாராட்டியதுடன் மட்டும்மல்லாமல் பொது மக்களும் கடமை உணர்வோடு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியை பாராட்டி வருகிறார்கள். அந்த  அளவுக்கு துணை முதல்வர் ஒபிஎஸ் மாவட்டத்தில் பெண் காக்கிகள் தான் துணிச்சலாக பணிபுரிந்து வருகிறார்களே தவிர  ஆண் காக்கிகள் பெயர் அளவில் தான் செயல்பட்டு வருகிறார்கள் என்பது தான்  வேதனையாக இருக்கிறது.
 

சார்ந்த செய்திகள்