சென்னை ஊரப்பாக்கத்தில் பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தலையை வெட்டி சம்பந்தப்பட்ட பெண் வீட்டின் முன் போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/VSsiejViPlo5l8BnYzGYx_UNv4uUrmYD7zcZNvnx4BE/1533347648/sites/default/files/inline-images/dzfv.jpg)
சென்னை தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பவர் ஊர்ப்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகிவந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கமலக்கண்ணனுக்கும் அந்த பெண்ணிடம் பழகுவது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை கமலக்கண்ணனின் தலை வெட்டப்பட்டு சமபந்தப்பட்ட பெண்ணின் வீட்டின் முன் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/iu2DuSI7v6qN3jHpiSMf1d3XjWGCvghey6oLK4an9Mw/1533347650/sites/default/files/inline-images/fdxg.jpg)
மோப்ப நாயுடன் வந்த போலிஸார் கமலக்கண்ணனின் தலையை கைப்பற்றினர். உடல் எங்குள்ளது என கண்டுபிடிக்க மோப்ப நாயை பயன்படுத்தினர். ஆனால் உடலை கண்டுபிடிக்க முடியாமல் 2 கிலோமீட்டர் தூரத்திலேயே மோப்ப நாய் நின்றது.
மேலும் இது தொடர்பாக பால்ராஜையும், அந்தபெண்ணையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலை வெட்டப்பட்டு ரோட்டில் வீசியெறிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.