Skip to main content

’மோடி அலையை ஓயவைக்க பெரிய தலை எதுவும் இல்லை’-தமிழிசை

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
t

 

’’வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறிய காங்கிரஸ் கட்சி தற்போதுமன்னிப்பு கேட்க வேண்டும்.   மோடி அலை ஓயவே ஓயாது.  எந்த காலத்திலும் மோடி அலையை ஓயவைக்க முடியாது.   மோடி அலையை ஓயவைக்க பெரிய தலை எதுவும் இல்லை.  
வெற்றி வந்தால் துள்ளுவதும் இல்லை; தோல்வி வந்தால் துவண்டுபோவதும் இல்லை.  நாங்கள் மிக மோசமான தோல்வியை சந்திக்கவில்லை.  இந்த தோல்விகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பாராளூமன்ற தேர்தல் வெற்றிக்கு உழைப்போம்.’’என்று தெரிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.

 

 சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.   தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலை பெற்று அக்கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.   மிசோரத்தில்   எம்.என்.எப். -27 கட்சி முன்னிலையில் உள்ளது.

 

இந்த 5 மாநில தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.      

                                                              
 

சார்ந்த செய்திகள்